இலங்கை – பாகிஸ்தானுடன் வர்த்தக உடன்படிக்கை!

இலங்கை – பாகிஸ்தானுடன் வர்த்தக உடன்படிக்கைகளை வலுப்படுத்த ஆர்வம் காட்டிவருகின்றது. அந்தவகையில் இதற்கான
நடைமுறை ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கையின் இராஜதந்திர தரப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கை நிறுவனங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதியாளர்களுக்கு இடையிலான சந்திப்பில் பாகிஸ்தானுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானின் வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையுடன் இணைந்து செயற்படுத்துவது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
Powered by Blogger.