102 வது மாதிரிக் கிராமம் – மன்னாரில் திறப்பு!

மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் லூர்துநகர் எனும் 102 வது மாதிரிக்கிராமம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவால் இன்று திறந்து வைக்கப்பட்டது
குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்ட 22 வீடுகளையும் அமைச்சர் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்ததுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா இரண்டு லட்சம் ரூபா வங்கிக் கடனுக்கான சான்றிதழ்களும், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.
நைட்டா தொழிற்பயிற்சி நிறுவனத்தின் மூலம் மேசன் தொழிற்பயிற்சினை மேற்கொண்ட 158 பயனாளர்களுக்கான சீருடைகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன், 115 பேருக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஐக்கிய தேசிய கட்சி மன்னார் மாவட்ட அமைப்பாளர் முகமது பஸ்மி, மன்னார் மாவட்டச் செயலர் மோகன்ராஸ், நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிகந்தகுமார், நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் தி.பரஞ்சோதி, நானாட்டான் பிரதேசசபை உபதவிசாளர் புவனம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.