கடற்கரும்பு​லி மேஜர் குமாரவேலின்17ம் ஆண்டு நினைவு!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் மற்றும் பளையில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தணிகைமதி ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது

கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி)  (கிருஸ்ணபிள்ளை சிவகுமார் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இந்த மாவீரரினதும் இதேநாள் பளைப் பகுதியில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை தணிகைமதி (முத்துவேல் திருச்செல்வம் - புதுமுறிப்பு, கிளிநொச்சி)  என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.