நர்மதா விஜயகாந்தின் கன்னி உரை!

மன்றத்தின் கௌரவ முதல்வர் அவர்களே சபையின் கௌரவ ஆணையாளர் அவர்களே, குழுக்களின் தலைவர்களே, மாநகர உறுப்பினர்களே, சபையின் செயலாளர் அவர்களே மற்றும் சபையின் அனைத்து அதிகாரிகள், மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்களே அனைவருக்கும் இச்சுபநேர வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன்.

முற்போக்கு தமிழ்தேசிய கட்சி ஆரம்பிக்கபட்டு முதற்தடவையாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் சூரியன் சின்னத்தில் கட்சிகளுடன் கூட்டமைத்து பல்வேறு பிரதேச சபைகளில் உறுப்பினர்களையும் யாழ் மாநகரசபையில் ஒரு உறுப்பினரையும் மக்கள் பலத்தோடு வென்று அரசியல் பாதையில் முதலாவது இலக்கை வெற்றிகரமாக அடைந்திருப்பதென்பது எமது கட்சிப் பொதுச்செயலாளளரும் எனது கணவருமான சுதர்சிங் விஜயகாந் அவர்களின் கடுமையான உழைப்பும் மக்கள் மனமறிந்த சேவையுமே ஆகும்.

இந்த வெற்றியையும் இந்த இடத்தில் நான் நிற்ப்பதற்கும் கட்சியை ஆரம்பித் நாள் தொட்டு இன்று வரை பல்வேறு இடர்கள் துன்பங்கள் அநீதியான குற்றச் சாட்டுக்கள் மத்தியிலும் மக்கள் ஆதரவோடு எமது உறுப்பினர்களும் தோள் கொடுத்து பாதுகாத்து வருகின்றார்கள் அவர்களுக்கு கட்சியின் சார்பாகவும் எனது கணவர் விஜயகாந் சார்பாகவும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன.

மேலும் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் எமது மக்களிடம் தற்போதைய அரசியல் நிலையையும் தற்போதைய அவசிய தேவையையும் எடுத்துக் கூறியதன் விளைவாக 22ம் வாட்டார திருநகர் மக்கள் நேரடியாக பெருவாரியான வாக்குப் பலத்துடன் வெற்றிபெறச் செய்தார்கள் ஆனால் காலப்பிளையால் யாழ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் தற்போது தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பேராசானநரம்புதாபீனம் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த பெரும் சபையில் கடந்த காலக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவரது உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதன் பிரகாரம் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூடி நர்மதா விஜயகாந் ஆகிய என்னை பரிந்துரைக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டதால் நான் உங்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

கௌரவ முதல்வர் அவர்களே சபை உறுப்பினர்களே யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களின் அன்றாட தேவைவைகளையும் அபிவருத்தி செய்து தங்களுக்கு பெற்றுத் தருவார்கள் என்ற அடிப்படையிலேயே எங்கள் அனைவரையும் இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்த மக்களிற்கு நாம் இயன்றளவில் எம்மால் முடிந்ததை சபையின் சட்டதிட்டத்திற்கு அமைவாகப் பொற்றுக் கொடுக்க வேண்டும் ஏனெனில் எமது இனம் அசாதாரண சூழ்நிலையில் இருந்து மீள் எழுச்சி பெற்று வருகின்ற இந்த நேரத்தில் எமது சேவை அவர்களுக்கு அவசியமாக இருக்கின்றது. மாறாக அரசியல் காழ்ப்;புணர்ச்சி காரணமாக மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை இடைநிறுத்தாது மக்கள் சேவை என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

யாழ் மாநகரசபை பொதுக் கூட்டங்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து நல்ல விடயங்களிற்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மாநகர உறுப்பினர் என்றவகையில் என்றும் ஆதரவைத் தருவேன் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்தகால சபைக் கூட்டங்களில் மாநகரசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 லட்சம் ரூபா வட்டார நிதியில் இருந்து எமது உடனடி வேலைத்திட்டத்தை நான் தங்கள் அனைவர் முன்னிலையிலும் சமர்ப்பிக்கின்றேன்.

மேலும் கௌரவ முதல்வர் அவர்களே உறுப்பினர்களே நான் சார்ந்த வட்டாரம் அடிப்படை வசதிகள் இன்றியும் அரச சேவையாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றதும். கைம்பெண்கள் விதவைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்கள் கொண்டார வட்டாரம் ஆகும் ஆகவே ஒதுக்கப்படுகின்ற அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் கட்சி பேதமின்றி எனது வட்டாரத்திற்கும் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 


No comments

Powered by Blogger.