சபாநாயகரின் விசேட அழைப்பு!

காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் காவல்துறை
ஆணைக்குழு ஆகிய இரு தரப்புக்கும் நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புப் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஆணைக்குழுவுக்கான பரிந்துரைகளை மேற்கொள்வதில் காவல்துறை மா அதிபர் தவறியமையினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்க்கவே இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியருகின்றது.
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய இரு தரப்புக்கும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.