27 மீனவர்கள் கைது!

எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தை சேர்ந்த 27 மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 10) நள்ளிரவு இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களைக் கைது செய்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எல்லை அருகே மீன் பிடிக்க வந்ததாகவும், காற்றின் வேகம் காரணமாக எல்லை தாண்டி படகுகள் அடித்து வரப்பட்டதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக இலங்கைக் கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மீது இலங்கை புதிய மீன்பிடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சட்டத்தின்படி, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், இலங்கை மதிப்பில் 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.