தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று!

இலங்கையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை இப்பரீட்சைக்கு 355,326 மாணவர்கள் தோற்றியுள்ளதாகவும், தேசிய ரீதியில் 3050 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்று காலை மிகவும் உற்சாகத்துடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை, பாடசாலை விடுமுறைக் காலத்தில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

#srilanka '#scholarship  #Grat5th

No comments

Powered by Blogger.