வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்!

வவுனியா – வைரவப்புளியங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.


மோட்டார் சைக்கிள் ஒன்றும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது 20 வயதான இரண்டு இளைஞர்களே காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் இதுவரையில் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Powered by Blogger.