யாழில் 72வது இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம்!

இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில் இடம்பெற்றது.துணை தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்தியாவின் தேசியக் கொடியினை துணைத் தூதுவர் ஏற்றி வைத்ததையடுத்து இந்திய ஜனாதிபதியால் மக்களுக்கு ஆற்றப்படும் உரையினை துணை தூதுவர் வாசித்தார்.தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .
#Tamilnews #india #jaffna

No comments

Powered by Blogger.