கோ-கோ: புரோமோவுக்கே இவ்வளவு செலவா?

நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள கோலமாவு கோகிலா படம் ஆகஸ்ட் 17 அன்று ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் எனும் அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இதன் விளம்பரத்துக்காகப் பாடல் ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்த விளம்பரப் பாடலை ரவிவர்மன் ஒளிப்பதிவில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.

படத்துக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் இயக்கினாரா? அல்லது படம் நிறைவாக இல்லை என்பதால் புரமோஷனுக்காக இந்த விளம்பரப் பாடலை இயக்குகிறேன் என்று உள்ளே வந்தாரா என்ற பேச்சு சினிமா இயக்குநர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க இந்தப் பாடலைப் படமாக்குவதற்காக ஆன செலவு கண்ணைக் கட்டி விட்டது என்கிறார்கள்.

நயன்தாராவின் உதவியாளர்கள் அவருடைய கேரவன் ஆகியன, விக்னேஷ் சிவனுக்கான செலவுகள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சம்பளம் ஆகியனவற்றை கூட்டிப் பார்த்தால் சுமார் ஒரு கோடி செலவு என்கிறார்கள்.

கோலமாவு கோகிலா படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் இந்த செலவு தேவையா என்கிறது படக் குழு.

ஒரு படத்தின் இயக்குநரை ஒதுக்கி வைத்துவிட்டு அவர் இயக்கிய படத்திற்கு வேறொரு இயக்குநர், அதுவும் நாயகியின் காதலரை வைத்து புரமோஷன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது அறிமுக இயக்குநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“லைக்கா பெரிய நிறுவனம் என்பதால் இதைத் தாங்குகிறது, வேறு தயாரிப்பாளராக இருந்தால் இதைத் தாங்க மாட்டார்” என்கிறார்கள்.

இவற்றை ஈடுகட்டுவதற்காகவே இப்படத்துக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா பங்குகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

எப்படியோ தனது காற்று வீசும் போதே காதலர் விக்னேஷ் சிவனை சினிமாவில் கரை சேர்க்கும் முயற்சியில் நயன்தாரா முழு கவனம் செலுத்தி வருகிறார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

#india  #nayanthara   #Ko-Ko  #kolamavu  #kokilla

No comments

Powered by Blogger.