துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

நுவரெலியா, மீபிலிமான, எல்க்ப்ளேன்ஸ் பிரதேசங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் தோட்டா துப்பாக்கி ஒன்றும், பெருந்தொகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரமற்ற 12 தோட்டாக்களைக் கொண்ட துப்பாக்கி, 82 தோட்டக்கள், தோட்டாக்களை நிரப்புகின்ற பெருந்தொகையான மூலப்பொருள்கள், ரி.-56 ரக தோட்டாக்கள் 08, மேலும் பல வெற்றுத்தோட்டாக்கள், வெடிப்பொருள், மாட்டுக் கொம்புகள் 03, வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஆடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


Powered by Blogger.