அனைத்து தமிழ் கட்சிகளும் ஒற்றுமையா??

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைவதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வவுனியா ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைவதன் மூலமே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடக்கம், அபிவிருத்தி வரை உள்ள அனைத்து விடயங்களயும் தீர்கமுடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பானது தேசிய அரசுடன் எந்தவித எழுத்து மூலமான உடன்படிக்கைகளையும், உத்தரவாதங்களும் இல்லாமல் ஆதரவு வழங்கியமை ஒரு பிழையான விடயமாகவே நான் கூறிவருகின்றேன்.

அதே போல புதிய அரசாங்கம் காணாமற் போனோர், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இறுதி கட்ட தீர்வுகளை ஏற்படுத்த முடியாமைக்கான காரணம் அதுவாகவும் இருக்கின்றது. அத்தோடு முன்னய ஆட்சியாளர்கள் மீளெளுச்சிபெறும் சூழ்நிலையும் கடந்த உள்ளுராட்சி தேர்தல் மூலம் தெரிகிறது. எனவே முதலமைச்சரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் பிரிந்து நிற்பதால் ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய முடியாது.

ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் அவர்கள் இந்த விடயங்களில் தலையிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றினைத்து எந்தவொரு நிபந்தனையும் அற்ற பேச்சுவார்த்தயை நடாத்தி தேசிய அரசுக்கு இருக்கின்ற மிகுதி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாவது ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் மட்டுமே தமிழ்மக்களுக்குரிய தீர்வை நோக்கி நகரலாம் என்பது எனது அபிப்பிராயம் என கூறினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.