போலி நிறுவனம் முற்றுகை- சந்தேகநபர் கைது!

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் மண் மற்றும் மணல் விநியோகத்திற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் போலி நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயாங்கொட, களகெடிஹேன பிரதேசத்தில் சீதுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளால் குறித்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கிருந்து போலி அனுமதிப்பத்திரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு கணினிகள், அச்சு இயந்திரம், ஸ்கேன் இயந்திரம் மற்றும் இறப்பர் முத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.