கூரையிலிருந்து – தவறி வீழ்ந்த சிப்பாய் உயிரிழப்பு!

நீர் தாங்கியைச் சுத்தம் செய்வதற்காக கூரையின் மேல் ஏறிய சிப்பாய், கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

பான்கொல்ல இராணுவ முகாமுக்கு அருகில்  இந்தச் சம்பவம்  நடந்துள்ளது.

படுகாயமடைந்த சிப்பாய் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

காலி தொம்பகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சிப்பாயே  உயிரிழந்துள்ளார்.
Powered by Blogger.