கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பரிவினரால் ஒருவர் கைது!

தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா – சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்க்கட்டுகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றபபட்டுள்ளது.

சந்தேகநபர் தான் அணிந்திருந்த ஆடையில் சூழ்ச்சுமமான முறையில் மறைத்து தங்க பிஸ்க்கட்டுகளை இவ்வாறு

கொண்டு வந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கபிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.