பிரான்சின் லூர்த்து ஆலயத்தின் பெருநாளும் புலம்பெயர் தமிழ்மக்களும்!

லூர்த்து அன்னையில் பக்திமிக்க அடியார் கூட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் முக்கிய இடம் உண்டு.

இதனடிப்படையில் இன்று லூர்தில் இடம்பெற்ற மரியன்னையின் விண்ணேற்ற திருநாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில் அதில் ஏராளமான தமிழ் மக்களும் பங்கெடுத்துள்ளனர்.

இந்தமுறையும் லூர்த் ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இவ் வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தெரியவருவதாவது அன்மைக் காலமாக பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம் பெறலாம் எனும் அச்சத்தில் இவ் வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் மரியன்னையின் விண்ணேற்ற திருநாளை மடு அன்னையை நினைத்து இவ் ஆலயத்தில் வழிபடுகின்றமை குறிப்பிடத் தக்கது.

இம்முறை பாடுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களிடமும் சிறிதளவு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மரியன்னையின் விண்ணேற்ற திருநாளை முன்னிட்டு மன்னர் மடு திருத்தலத்திலும் இன்று வருடாந்த திருவிழா இடம்பெற்றதும் அதில் இலங்கை முழுவதும் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் பங்கெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது விடுமுறை காலமாதலால் அதிகளவான இலங்கையர் இவ் ஆலயத்தை தரிசிப்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.