உடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் குணமாகாது.
மூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் 2 பழத்தை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு டம்ளர் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு மீதியுள்ள 1 எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர். ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு மகிழ்ச்சியாக குடித்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய பின்னர் உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி முழுவதும் தானாக வெளியேறி விடும்.

No comments

Powered by Blogger.