இத்தாலியில் இலங்கை இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் !

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கை இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள ஏரி ஒன்றில் தனது குடும்பத்தினருடன் குளிக்க சென்ற இலங்கையர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஆசிரி ஹசிதபிரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹசிதபிரிய மரணத்தினால் அதிர்ச்சியடைந்த இத்தாலி வாழ் இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

லேக்கோ - கோமோ - கோலிகோ ஆகிய பிரதேசங்களை இணைந்து அமைந்துள்ள இந்த ஏரி ஆபத்தானது என குறிப்பிடப்படுகிறது.

ஏரியில் குளிக்க செல்வதற்கு முன்னர் விழிப்புணர்வு இல்லாமையே இந்த மரணத்திற்கு காரணம் என அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

#Deth #Italy #srilankan #Makarama

No comments

Powered by Blogger.