பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினையை முகநூலில் பகிர்ந்தமையால் இருவர் விளக்க மறியல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் இலட்சனையை முகநூலில் பகிர்ந்தமை தொடர்பாக, கைது செய்யப்பட்ட இருவரை 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினையை பயன்படுத்தி, முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதான குற்றச்சாட்டில், இரத்தினபுரியை சேர்ந்த தினேஸ்குமார் மற்றும் விதுஸன் என்ற இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள்த இருவர் குறித்த மேலதிக நடவடிக்கைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் கீழ் இடம்பெறும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#FaceBook   #LTTE  #Srilanka   #Prapakaran  #Two_Person   #LTTE_Logo

No comments

Powered by Blogger.