பரிஸ் - மெற்றோ சுரங்கத்துக்குள் கத்திக்குத்துக்கு நபர் பலி!

சனிக்கிழமை இரவு, பரிசில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் métro Exelmans நிலையத்தின் சுரங்கத்துக்குள் நபர் ஒருவரை பிறிதொரு நபர் கத்தியால் குத்தியுள்ளார். நெஞ்சுப்பகுதியில் மிக ஆழமாக குத்தியுள்ளார். ஆளில்லா சுரங்கத்துக்குள் இச்சம்பவம் இடம்பெற்றதால், காயமடைந்த நபரை காப்பாற்ற எந்த வழியுமில்லாமல் போயுள்ளது. 7.55 மணிக்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். RATP கண்காணிப்பு கமராவில் பதிவான இச்சம்பவத்தினை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர். தொடர்ந்து, தப்பிச்சென்ற குற்றவாளியை தேடி வந்தனர்.

பின்னர் Mirabeau மேம்பாலத்தில் வைத்து கொலையாளியை காவல்துறையினர் சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர். தாக்குதலுக்குரிய காரணங்கள் எதுவும் தற்போது வரை அறிய முடியவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

#Paris  #Frankreich  #Madder   #Metro  ##Mirabeau
Powered by Blogger.