ஜேர்மனியில் காட்டுத்தீ! – நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

ஜேர்மனி தலைநகர் பேர்லினில் பரவிய காட்டுத்தீயைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள்
தங்கள் குடியிருப்புகளிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோடைக் கால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், காட்டுத்தீ பரவியுள்ளதோடு இன்று (வெள்ளிக்கிழமை) அதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதனால், மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயினை கட்டுப்படுத்துவதற்காக 600இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படைவீரர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு தீ ஓரளவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், பிரதேசம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.