வாள்வெட்டு குழுவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்!

அண்மையில் கிராம அலுவலர் ஒருவரது அலுவலகம் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டமையினை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் இன்று தமது பணிகளை தங்களுக்கான அலுவலகங்களில் மேற்கொள்ளாது தமக்குரிய பிரதேச செயலகங்களில் அலுவலக பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/100 வண்ணார்பண்ணை கிராம அலுவலர் அலுவலகம் வாள்வெட்டுகுழுவினரால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை கண்டித்து நேற்று முன்தினம் நல்லூர் பிரதேச கிராம அலுவலர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கூறி நல்லூர் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளைத்தொடர்ந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் அடையாள அலுவலகப் புறக்கணிப்பு நடத்தவுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மாவட்ட செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

#Jaffna  #Nallur  #Tamilnews   #Grama
Powered by Blogger.