முள்ளிக்குளம் மக்களின் பரிதாப நிலை!(காணொளி)

எமது பூர்வீகமான வாழ்விடத்தை கடற்படையிடமிருந்து மீட்டுத்தந்தால் எமது பகுதியில் நாம் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் எனவும் தாம் தற்காலிகமாக இருக்கும் இடத்திற்கு வெளிச்சங்கள் இல்லாது காட்டு மிருகங்களாலும் விச உயிரினங்களினாலும் துன்பப்படுவதோடு மட்டுமில்லாது மழைபெய்தால் பெரும் துன்பப்படுவோம் என்கிறார்கள் முள்ளிக்குளம் மக்கள்

மேலும் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் மாணவர்கள் தாம் இதுவரைக்கும் ஏழு எட்டு பாடசாலைகளில் கல்வி கற்றுவிட்டோம். இனியும் எமது கல்விசெயற்பாடு எமது முள்ளிக்குளம் பாடசாலையிலேயே இடம்பெறவேண்டுமென உருக்கத்துடன் கோருகின்றனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் பகுதி மக்களின் வாழ்விடத்தை மீட்டுகொடுப்பற்கு அனைத்து நல்லெண்ணம் கொண்டவர்களும் அயராது முயற்சியெடுத்து இப்பகுதி மக்களையும் நல்லநிலையில் வாழவைக்க உதவவேண்டும் என்று பலர் சொல்கின்றனர். 

No comments

Powered by Blogger.