திலீபன் நினைவிடத்தில் பனர்கள் அகற்றப்பட்மைக்கு த.தே.ம.முன்னனி கண்டனம்!


நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் மும்மொழிகளிலும் கட்டப்பட்டிருந்த பனர்கள் படைப் புலனாய்வாளர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில்,

நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன்  தலைமையில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டது.

அதன் பின்னர் திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவரது வரலாற்றை சுருக்கமாக விளக்கும் வகையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த பனர்கள் நேற்றிரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. அரச மற்றும் படைப் புலனாய்வாளர்கள் அல்லது அவர்களது அடிவருடிகளே இந்த ஈனத்தனமான செயலை புரிந்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றோம். ஈனர்களின்இச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

No comments

Powered by Blogger.