களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையின் மாணவியொருவரை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம்!

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி மற்றும் செட்டிப்பாளையம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவியொருவரை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, குறித்த பாடசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து பாடசாலையை முற்றுகையிட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கைது செய்யும்வரை பாடசாலையை விட்டு வெளியேறப் போவதில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் மாணவியொருவரை அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார், எனினும் பயத்தின் காரணமாக குறித்த மாணவி யாரிடமும் வீட்டாரிடமோ, பாடசாலைத் தரப்பிடமோ தெரியப்படுத்தாது தனது நண்பியிடம் மாத்திரம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் அம் மாணவி அறிவித்துள்ளதையடுத்தே பாடசாலை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவம் இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை என தெரிவித்து பாடசாலையை முற்றுகையிட்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Kaluvanchikudi
Powered by Blogger.