எல்லை நிர்ணய மீளாய்விற்காக பிரதமர் தலைமையில் குழு நியமனம்!

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு தொடர்பில் பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நாடாளுமன்றத்தின் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்று நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குழுவை சபாநாயகர் இன்று நியமித்துள்ளார்.

#colombo   #srilanka  #tamilnews    #Group

No comments

Powered by Blogger.