ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் மூடப்பட்டது!

ரஜரட்ட பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.நீர் பற்றாக்குறை காரணமாகவே பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலை மாணவர்களிடையே நோய் ஒன்று பரவியதன் காரணமாக கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்ட பல்கலைக்கழகம் கடந்த 27 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக பல்கலை மாணவர்களுக்கு நீர் வழங்க முடியாதுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.


#srilanka  #university  #Raarata   #tamilnews  
Powered by Blogger.