கருணாநிதியின் நிலை கவலைக்கிடம்!

கருணாநிதியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று முதல் மீண்டும் மோசமடைந்துள்ளது.

கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மேலம் 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலையை கணிக்க முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதனால் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். நேற்று முதலே கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை அறிவித்த 24 மணி நேர கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை கருணாநிதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மாறாக கருணநிதிக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கருணாநிதியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கருணாநிதியின் குடும்பத்தினல் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.

கருணாநிதி தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் பெரும் கவலை தேய்ந்த முகத்துடன் மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர்.

இதனிடையே காவேரி மருத்துவமனை முன்பு திடீரென அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


#Karunanidhi     #india  #tamilnews  #kavurey  #Hospital     #istalin

No comments

Powered by Blogger.