கிளிநொச்சியில் மாணவன் ஒருவர் பலி!

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் கிளிநொச்சி, மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து மாணவனை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Powered by Blogger.