கருணாநிதியின் உயிர் பிரிந்தது! ஆழ்ந்த துயரத்தில் மஹிந்த!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை. அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என மஹிந்த ராஜபக்ச தனது இரங்கலை கூறியுள்ளார்.இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இதனை அடுத்து இந்திய ஜனாதிபதி, பிரதமர் உற்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.