மூடப்பட்டிருந்த கொச்சின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

கேரளாவில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சின் விமான நிலையம் மீண்டும் எதிவரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது,
கொச்சின் விமான நிலைய அதிகாரிகளால் விடுக்கப்பட அறிக்கையின் ஊடாகவே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது,
விமான சேவை நிறுவனங்கள், அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் மத்திய பகுதி வெள்ள அனர்த்த நிலைமைகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் அதனை எதிர்வரும் 26 ஆம் திகதி மீளத் திறப்பதில் பிரச்சினைகள் காணப்படுவதாக கொச்சின் விமான நிலைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
கொச்சி விமானநிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் குறித்த விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.