பௌத்த சம­யமே நல்­லி­ணக்­கத்துக்கு தலை­மைத்­து­வம் வழங்­கு­கி­றது!

பௌத்­தம் பல­வந்­த­மாக எவ­ரை­யும் மதத்­தில் இணைந்து கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தும் சம­யம் அல்ல என­வும், சக­வாழ்வு மற்­றும் நல்­லி­ணக்­கத்துக்கு பௌத்த சம­யமே தலை­மைத்­து­வம் வழங்­கு­கி­ற­தா­க­வும் வட மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே தெரி­வித்­துள்­ளார்.
பிர­தேச சபை­யின் அனு­ம­தி­யில்­லா­மல் தையிட்­டில் விகா­ரைக்கு நேற்று முன்­தி­னம் அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
30 ஆண்டு கால போரில் கடு­மை­யாக சேத­ம­டைந்த யாழ்ப்­பா­ணம், காங்­கே­சன்­துறை திஸ்ஸ விகா­ரையை அமைப்பதற்கான அடிக்­கல்லை நேற்று முன்­தி­னம் வட மாகாண ஆளு­நர் றெஜி­னோ­லட் குரே நாட்டி வைத்­தார். அங்கு தொடர்ந்­தும் கருத்து வெளி­யி­டு­கை­யில்,
பௌத்த சம­யத்தைத் தவிர உல­கில் வேறு எந்த வழிப்­பாட்டு தலங்­க­ளி­லும் தெய்­வங்­க­ளின் படங்­கள் அல்­லது வேறு மத தலை­வர்­க­ளில் படங்­கள் வைக்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­து­டன் வழிப்­பட வாய்ப்­பில்லை.
எனி­னும் பௌத்த சம­யத்துக்கு அப்­ப­டி­யான வரை­ய­றை­கள் கிடை­யாது. பௌத்­தம் பல­வந்­த­மாக எவ­ரை­யும் மதத்­தில் இணைந்துக் கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தாது. இத­ன­டிப்­ப­டை­யில் நோக்­கி­னால், சக­வாழ்வு மற்­றும் நல்­லி­ணக்­கத்துக்கு பௌத்த சம­யமே தலை­மைத்­து­வம் வழங்­கு­கி­றது என்­பது தெளி­வா­னது.
விகாரை என்­பது வேறு மதங்­க­ளை­யும், வேறு இனங்­க­ளை­யும் சவா­லுக்கு உட்­ப­டுத்­தும் இட­மாக இருக்­கக் கூடாது என­வும் ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே குறிப் பிட்­டுள்­ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.