மீண்டும் முதலமைச்சராக விக்கி போட்டியிட வேண்டிய தேவை என்ன?
தற்போதைய வடக்கு மாகாண சபையில் எந்தவித முன்னேற்றமும் காணவில்லை ஆனால் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தான் கண்டிப்பாகப் போட்டியிடவேண்டும் என முதலமைச்சர் விடாப்பிடியாக நிற்பதன் நோக்கம் என்னவென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது தாயகம் அலுவலகத்தில் நேற்று மாலை விளையாட்டுக்க ழகங்களுக்கான உதவித் திட்டத்தை வழங்கி வைத்த பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்ட மைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையில் இருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே முதலமைச்சர் வெளியேறிவிட்டார். கூட்டமைப்பி னுடைய மாகாண சபை அறுதிப்பெரும்பான்மையுடன் செயற்படுகின்ற இந்த சபையிலே தாங்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டு அல்லது தாங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து செயற்படுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொன்னால் அவர்கள் கூட்டமைப்பினுடைய சபையிலே இருப்பது என்பதும், பதவி வகிப்பது என்பதும் அநாகரிகமானது.
கட்சி இல்லாத மாகாண சபை உறுப்பினர்கள்
முதலமைச்சர் மாத்திரமல்ல, மாகாண சபை உறுப்பினர்களான பொ . ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்றோர் தாங்கள் எந்தக் கட்சியும் இல்லை என்று சொல்கிறார்கள்.
ஆனால் தேர்தலில் எந்தக் கட்சியும் இல்லாமல் அவர்கள் வாக்குக் கேட்டு மாகாண சபைக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வந்தவர்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று பொ .ஐக்கரநேசன் சொன்னதாக ஒரு பத்திரிகைச் செய்தியை பார்த்தேன்.
ஆனால் தேர்தலில் எந்தக் கட்சியும் இல்லாமல் அவர்கள் வாக்குக் கேட்டு மாகாண சபைக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வந்தவர்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று பொ .ஐக்கரநேசன் சொன்னதாக ஒரு பத்திரிகைச் செய்தியை பார்த்தேன்.
கூட்டமைப்பு என்பது ஒரு கூழ் முட்டை
கூட்டமைப்பு என்பது ஒரு கூழ் முட்டை என்றும் அதற்கு அடைகாக்க முடியாது. அடைகாப்பது பிரயோசனமற்றது என்றும் தெரிவித்துள்ளதாக பார்த்தேன்.
அப்படியென்றால் அவரும் கூழ் முட்டை தான். கூழ் முட்டைக்குள் தான் அவரும் இருக்கிறார். கூட்டமைப்பினுடைய அங்கத்தவராக தான் இன்றும் பதவியில் இருக்கிறார். நான் இன்று சொல்வதைக் கேட்டு சிலவேளை மாகாண சபை பதவியை அவர் தூக்கியெறியலாம். ஏனென்றால் மாகாணசபை நிறைவு பெறுவதற்கு இன்னும் குறிப்பிட்ட சில நாட்கள் தான் இருக்கிறது.
ஆகவே, வாக்குப் போட்ட மக்களுக்கு விசுவாசமாக எல்லா இடத்திலும் சரி பிழை வரும். அந்த சரிபிழைகளை திருத்திக் கொண்டு இந்த மாகாணசபை திறம்பட நடத்தி மக்களுக்குரிய சேவையை வழங்கியிருக்க வேண்டும்.
சில அமைச்சுக்கள், சில திணைக்களங்கள் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த மாகாண சபை திறம்பட செயற்படாமைக்கு அந்த மாகாண சபையினுடைய வழிகாட்டியாக இருக்கின்ற முதலமைச்சரே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் புதிய கூட்டு ஆகவே அந்த புதிய கூட்டு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அல்லது தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு குழுவாக இயங்குவதற்கு அவர்கள் முயற்சிகள் எடுப்பதாக நாங்கள் அறிகிறோம். அப்படியானதொரு புதிய அணியின் ஊடாக முதலமைச்சர் அவர்கள் வந்தாலும் மக்கள் அதற்குரிய தீர்ப்பை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன்.
நாங்கள் எல்லோரும் இந்த அரசியலுக்கு வந்தமைக்குரிய காரணம், 30 வருட போரில் சின்னாபின்னமாக இருக்கின்ற எங்களது தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே. அந்த எண்ணத்தை எவ்வளவு தூரம் மனதில் வைத்துக் கொண்டு எமது அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.
மாகாணசபையிலேயே செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகள், ஏனைய வேலைகள், அரசியல் வேலைகள் என்பவற்றில் என்ன என்ன வேலைகளை நீங்கள் செய்தீர்கள்.
என்ன வேலை முடித்திருக்கிறீர்கள். என்னத்தை செய்வதற்கு முதலமைச்சருக்குரிய ஒரு 5 வருடம் தேவையாக இருக்கிறது…? என்பதை முதலமைச்சர் வெளிப்படுத்துவாராக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளத்தக்க வேலைத்திட்டங்களாக இருந்தால் அவருக்கு பின்னால் நிற்பதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.
என்ன வேலை முடித்திருக்கிறீர்கள். என்னத்தை செய்வதற்கு முதலமைச்சருக்குரிய ஒரு 5 வருடம் தேவையாக இருக்கிறது…? என்பதை முதலமைச்சர் வெளிப்படுத்துவாராக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளத்தக்க வேலைத்திட்டங்களாக இருந்தால் அவருக்கு பின்னால் நிற்பதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.
ஆனால் அதற்கு மாறாக கடந்த 5 வருடங்களிலே எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத பல விடயங்களை குழப்பியடித்த நிலை இருக்கும் போது திருப்பவும் முதலமைச்சராக இருக்க 5 வருடம் கேட்பது என்ன நியாயத்தில், என்ன அடிப்படையில் என்பது புரியவில்லை.
நாங்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் பதவிக்கு வந்தால் 30 வருட போரால் துன்பப்பட்ட மக்களது துன்பத்தை போக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாங்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் பதவிக்கு வந்தால் 30 வருட போரால் துன்பப்பட்ட மக்களது துன்பத்தை போக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அப்படி எம்மால் முன்னெடுக்கப்படாவிட்டால், அந்த திறன் எம்மிடம் இல்லை என்றால் அல்லது திறன் இருந்தும் பலர் எம்மை தடுக்கிறார்கள் என்றால் நாம் இதிலிருந்து ஒதுங்கி போவது தான் நல்ல விடயம். செய்யக் கூடியவர்கள் வந்து செய்வார்கள். அதை விடுத்து வெறும் பதவிக்காகவும், காழ்புணர்ச்சிக்காகவும், அரசியல் போட்டிக்காகவும் மீண்டும் மீண்டும் வந்து இன்னுமொரு 5 வருடத்தை வீணாக்கி இந்த மக்களுக்களின் வாயில் மண் அள்ளிப் போடுவதாக தான் அமையும் எனத் தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை