வேகமெடுக்கும் லட்சுமி மேனன் படம்!

பிரபு தேவா, லட்சுமி மேனன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் யங் மங் சங் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் றெக்க. லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவு அந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து லட்சுமி மேனன் நடிப்பில் வேறெந்த படமும் வெளியாகவில்லை.

லட்சுமி மேனன் தற்போது பிரபு தேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் படத்தில் நடித்துவருகிறார். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இதன் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் சண்டைக்காட்சி அங்குப் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் சிவா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

பிரபு தேவா குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜூன் இயக்குகிறார். தங்கர் பச்சான், ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1970-80 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு படம் உருவாகி வருகிறது.

இதுதவிர பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்க வேல் திரைப்படம் தயாராகிவருகிறது. நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் அந்தப் படத்தில் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
Powered by Blogger.