கூட்டு அரசை வீட்­டுக்கு அனுப்­பா­மல் ஓய­மாட்­டோம்

செப்­ரெம்­பர் 5ஆம் திகதி நாம் வீதிக்கு இறங்­கு­கின்­றோம். அன்று ஆரம்­பிக்­கும் போராட்­டம், கூட்டு அரசை வீட்­டுக்கு அனுப்­பும் வரை ஓயாது.

இந்த அரசை எப்­படி வீட்­டுக்கு அனுப்­பு­கின்­றோம் என்­பதை வரவு –- செல­வுத் திட்­டம் மீதான வாக்­கெ­டுப்­பில் பாருங்­கள். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

கொழும்பு சிங்­கள ஊட­கத்­துக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

செப்­ரெம்­பர் 5ஆம் திகதி நாம் வீதிக்கு இறங்­க­வி­ருக்­கின்­றோம். அன்று ஆரம்­பிக்­கும் போராட்­டம் அரசை வீட்­டுக்கு அனுப்­பிய பின்­னரே முடி­வுக்கு வரும். ரணில் வீடு செல்ல நேரி­டும். அவர் எந்த வீட்­டுக்­குச் செல்­வார் எனத் தெரி­ய­வில்லை. வரவு – செல­வுத்­திட்­டத்­தின் போது நாம் எமது கைவ­ரி­சை­யைக் காண்­பிப்­போம்.

மேலும், கீத் நொயார் விவ­கா­ரத்­தில் எனக்கு ஞாப­க­மில்லை என்று நான் கூற­வில்லை. கீத் நொயாரை நான் சந்­தி­த­தில்லை. ஆனால் அவர் யார் என்று எனக்­குத் தெரி­யும். இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­ற­போது நாட்­டில் போர் நடை­பெற்­றதை மறக்­க­வேண்­டாம். இரவு பகல் பாராது நாம் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­டோம். நாட்­டின் தலை­வர் ஒரு­வ­ருக்கு தான் செய்­யும் அனைத்து விட­யங்­க­ளை­யும் மன­தில் வைத்­துக்­கொண்டு வாழ்­நா­ளைக் கழிக்க முடி­யாது.

பல ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக வந்த தொலை­பேசி அழைப்பு அரச தலை­வ­ருக்கு ஒரு­வ­ருக்கு நினை­வில் இருக்­குமா? இப்­ப­டி­யொரு தொலை­பேசி அழைப்பு வந்­தி­ருந்­தால் நான் எனது செய­லர் அல்­லது பாது­காப்பு செய­லர், பொலிஸ் மா அதி­பர், இரா­ணு­வத் தள­பதி ஆகி­யோ­ருக்கு விசா­ரணை செய்­யு­மாறு கூறி­யி­ருப்­பேன். அவ்­வா­றான விட­யங்­க­ளைக் கேட்­டால் நான் எப்­ப­டிக் கூறு­வது?

அடுத்த அரசு வந்­த­த­தும் இவ்­வா­றான விசா­ர­ணை­கள் நடக்­கும் போது இவர்­க­ளின் நினைவு எப்­ப­டி­யி­ருக்­கும் என்று பார்ப்­போம். அர­சி­யல் பழி­வாங்­க­லா­கவே இத­னைச் செய்­கின்­ற­னர் – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.