ராஜபக்ஷவினருடன் மைத்திரி அரசியல் பேசவில்லையா??

மெதமுலனவிற்கு ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், ராஜபக்ஷ தரப்பினருடன் அரசியல் விடயங்கள் குறித்து கவனஞ்செலுத்தப்படவில்லையென ராஜபக்ஷ தரப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (சனிக்கிழமை) காலை மெதமுலனவிலுள்ள ராஜபக்ஷாக்களின் பாரம்பரிய வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி சிறிசேன சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றதுடன் கலந்துரையாடலிலும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் மறைவு தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகவும் அரசியல் விடயங்கள் ஏதும் கலந்துரையாடப்படவில்லை என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளரொருவர் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் மெதமுலனவிற்கு ஜனாதிபதி மைத்திரி மேற்கொண்ட முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.