மத்தள விமான நிலையத்தில் நியூசிலாந்து விமானப் படை விமானம் தரையிறக்கம்!

நியூசிலாந்து விமானப்படைக்கு சொந்தமான NEH795 என்ற விமானம், 15 விமானப் படையினருடன் இன்று முற்பகல் 11.32 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளது.

இந்தோனேசியாவின் சுல்தானா அசிஸ் விமான நிலையத்தல் இருந்து, துபாய் நாட்டின் அல்மின் ஹட் விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் விமான பணியாளர்கள் ஓய்வு எடுக்கவும் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பவும் இந்த விமானம், மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை வந்துள்ள நியூசிலாந்து விமானப்படையினர், இன்று ஹம்பாந்தோட்டை ஷங்ரீலா ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை முற்பகல் துபாய் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக மத்தள விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


#NewZealand  #Flight #Airforse  srilanka  #Mathala_Airphort  #tamilnews
Powered by Blogger.