இலங்கையில் வியக்கும் செயல் வெளிநாட்டு பிரஜைகள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தம்புள்ளை ரஜ மஹா விகாரைக்கு அருகில் நெல் அறுவடை செய்யும் செயற்பாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் சேதன பசளைகளை மாத்திரம் பயன்படுத்தி நெல் பயிரிடப்பட்டிருந்தது.

தம்புள்ளையில் இயற்கையான முறையில் பயிரிடப்படும் பயிர்களை அறுவடை செய்யும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இம்முறை வெற்றிகமாக பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்யும் நடவடிக்கையில் வெளிநாட்டு தம்பதியர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காண முடிவதாக வயல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் கிராம வாழ்க்கையை மறந்து, நவநாகரீகத்தை நாடுவோர் மத்தியில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.