மியன்மார் இராணுவத் தளபதியின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது!

மியன்மார் இராணுவத் தளபதியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளக் கணக்கை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வுப் பிரசாரத்தை தமது சமூகவலைத்தளம் ஊடாக முன்னெடுத்தமையை காரணம் காட்டியே ஃபேஸ்புக் நிறுவனம் இந்த கணக்கு முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது.

மியன்மாரில் கடந்த ஆண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

இதனையடுத்து 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரிலிருந்து பங்களாதேஷுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில், ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி, ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வுப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மியன்மாரின் இராணுவத் தளபதி, உள்ளிட்ட சில தனி நபர்கள் மற்றும் சில மியன்மார் அமைப்புகள் ஆகியன இந்த பிரசாரத்தை ஃபேஸ்புக்கில் முன்னெடுத்தன.

இதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் மியன்மார் இராணுவத் தளபதி மற்றும் 19 தனிநபர்களின் கணக்குகளை முடக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.