சிங்கள குடியேற்றங்கள் கோத்தபாய ராஜபக்ஷவின் காலத்திலேயே இடம்பெற்றது !

முல்லைத்தீவில் அரசாங்கம்  எந்தவொரு சிங்களக் குடியேற்றத்தையும் செய்யவில்லை.   சிங்கள குடியேற்றங்கள் கோத்தபாய ராஜபக்ஷவின் காலத்திலேயே இடம்பெற்றது என்று   அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தில் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு   கருத்து வெளியிடுகையிலேயே   அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தன்னிடம் சாட்சிகள் இருப்பதாக வடக்கு முதல்வர்  விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.    அவ்வாறு சாட்சிகள் இருந்தால்  அவை தொடர்பில் விக்கினேஸ்வரன்   மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மாறாக  இனவாதம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

மேலும் வடக்கு மக்கள் மூன்றுவேளை உணவுக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள்  இருக்கின்றது. அதையெல்லாம் விட்டுவிட்டு இராணுவ நினைவுதூபி தொடர்பில் மக்கள் பேசவில்லை.  விக்கினேஸ்வரனுக்கு இனவாதம் தேவைப்பட்டுள்ளதால் அவர் இதனைப் பேசிக்கொண்டிருக்கின்றார் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார். 

#rajitha    #  senarathna   #kothapaya  #tamilnews   #srilanka  #Mullathiviu   #c.v.vickenswaran

No comments

Powered by Blogger.