முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்!

முல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த இ ளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவரு வதாவது,

முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில்   உயர்தர பரீட்சை எழுதிவரும்  19 அகவை மாணவியை பளையினை சேர்ந்த 22 அகவையுடைய இளைஞன் நேற்று 20.08.18 அன்று பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை

ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 21.08.18 அன்று உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளார்கள்.

கலைப்பிரிவில் உயர்தர பரீட்சையில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 19 அகவையுடைய மாணவி 20 அன்று பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை இளைஞர்கள் சிலர் சேர்ந்து

வாகனம் ஒன்றில் குறித்த யுவதியை கடத்தி பளைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அங்கு குறித்த யுவதியினை விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாணவி வீடு திரும்பாத நிலையில் 20.08.18 அன்று மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் மாணவியை காணவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளார்.

இன்னிலையில் 21.08.18 இன்று காலை குறித்த மாணவியை முல்லைத்தீவின் ஒரு இடத்தில்  ஊர்த்தியில் கொண்டுவந்து இறக்கி விட்டுள்ளார்கள் மாணவி நடந்த சம்பவத்தினை தாயாரிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த மாணவியுடன் தாயார் பொலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.இன்னிலையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்

கடத்திய இளைஞனை தேடி பளை சென்று கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டுவந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்

கைதுசெய்யப்பட்ட இளைஞனை 22.08.18 அன்று நீதி மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.