நெடுந்தீவுக்கு உலங்குவானூர்தி மூலம் சென்ற பரீட்சை தாள்கள்!

நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

“வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக நெடுந்தீவுக் கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலை உள்ளது. அதனால் படகுப் போக்குவரத்துக்கு அசாதாரண நிலை காணப்படுகின்றது.

அதனடிப்படையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாணவர்களின் விடைத்தாள்கள் உலங்கு வானூர்தி ஊடாக எடுத்துவரப்பட்டன.

அத்துடன், இன்று தொடக்கம் 3 நாள்கள் நடைபெறும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் உலங்கு வானூர்தி ஊடாக இன்று நெடுந்தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நெடுந்தீவு பரீட்சை நிலையத்தில் 33 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றன

No comments

Powered by Blogger.