தொப்பையைக் குறைக்க உதவும் அன்னாசி பழம்!

இயற்கையின் கொடையான அன்னாசி பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ள இந்த அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.

முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாசி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.

இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு இந்த பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
Powered by Blogger.