விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சீருடையை அகற்ற சொன்ன பொன்சேகா!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிர பாகரனின் உடலில் இருந்து விடுதலை புலிகளின் சீருடையை அகற்றுமாறு சரத் பொன்சேகாவே உத்தரவு பிறப்பித்தார். என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சகி கலகே கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் கூ றியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,

“பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார்.

பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார்.

இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சகிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Ponsekka   #srilanka  #Army    #Velupillai  #Prabhakaran
Powered by Blogger.