பாரிஸ் மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!(படங்கள்.காணொளிகள்)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முத்தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவத்தின் 22வது நாளாகிய(26.08.2018) முத்தேர் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது விநாயகர், முருகன் மற்றும் அம்மன் தெய்வங்களின் தேர் இடம்பெற்றிருந்ததுடன், தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.மேலும், கரகாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும், ஆண்கள் காவடி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது   என எமது செய்தியாளர் ஆனந் குறிப்பிட்டார்.
Powered by Blogger.