ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் வேலைநிறுத்தம்!!

ரயில்வே ஊழியர்கள் சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப சங்க குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (23) முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தம் “பெரஹராவைப்” பார்வையிடச் செல்லும் பயணிகள் மற்றும் உயர் தரப் பரீட்சை மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதி எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.