வெளிநாடு பெருவில் நிலநடுக்கம்: 7.1 ரிச்டராக பதிவு

பெரு நாட்டில் 7.1 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெருவின் தென்கிழக்காக பிரேசில் எல்லையை அண்மித்த பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
610 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்த சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும், சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
பெருவில் 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட 8.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தாலும் அதனால் ஏற்பட்ட சுனாமியாலும் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.