மக்களின் ஜனநாயக உரிமையை அரசாங்கம் மீறுகிறது !

மாகாண சபை தேர்தலை இழுத்தடித்து மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மீறி அரசாங்கம் செயற்படுகின்றது என, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டது. தற்போது தேர்தலை நடத்தாது தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து, மக்களின் வாக்குரிமையை பறித்துள்ளனர். இவ்வாறாக ஆட்சி பீடமேறிய நாள் முதல் இன்றுவரை நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து, ஒன்றிணைந்த எதிரணி சார்பில் கொழும்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி பாரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.  
Powered by Blogger.