சிறைச்சாலை பாதுகாப்பான போதைப்பொருள் விற்பனை நிலையமாக மாற்றம்!

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு தங்களது விற்பனையை மேற்கொள்ள சிறைச்சாலை பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது.

இவ்வாறு அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

சில ஆண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அரசில் இருப்பவர்களுடன் தான் தொடர்புகளை வைத்திருந்தனர்.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை தற்போதைய அரசு முன்னெடுத்து வருகிறது.

கடந்த ஆட்சியின் போது இவ்வாறு கைது செய்யப்படவில்லை. அவ்வாறு கைது செய்யப்படுபவர்களையும் அரசில் இருக்கும் அரசியல்வாதிகள் காப்பாற்றி விடுவார்கள்-என்றார்.

No comments

Powered by Blogger.