வாள்வெட்டு சம்பவங்கள் சபையில் பேசி பயனில்லை!

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்று ம் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இவற்றை கட்டுப்படுத்த ஐனாதிபதியுடன் பேசி வி சேட சட்டத்தை கொண்டுவாருங்கள்.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கள் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தி ல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அ து குறித்து ஆராய்வதற்காக,இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட் ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் கூட்டப்பட்டது. இத ன்போதி மாவட்டத்தில் அதிகரித்துள்ள குற்றச் செய ல்கள் குறித்து பேசப்பட்டதுடன்,பொலிஸார் இந்த விடயத்தில் அசமந்த போக்குடன் இருப்பாதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலை யில் குற்றவாளிகளை பிடித்தாலும் அவர்கள் பி ணையில் வருகிறார்கள் எனவும்,அவர்கள் பயன்படுத்தும் தொழிநுட்பத்தை தம்மால் ஒட்டுக்கேட்க முடியவில்லை. எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த மா காணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,இந்த விடயம் குறித்து இந்த சபையில் பேசி பயனி ல்லை. ஆகவே இந்த குற்றச் செயல்களை கட்டுப்ப டுத்துவதற்கு விசேட சட்டம் ஒன்றை உருவாக்குமாறு ஐனாதிபதியை கோருங்கள் என சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.

#srilanka   #Mathiri  #Sivagilingam    #tamil_news   #Tamil   #jaffna

No comments

Powered by Blogger.